Tamil

  • Job 12:23

    அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.


  • Job 12:22

    அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.


  • Job 12:21

    அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.


  • Job 12:20

    அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவரின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.


  • Job 12:19

    அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.


  • Job 12:18

    அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.


  • Job 12:17

    அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.


  • Job 12:16

    அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.


  • Job 12:15

    இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால் பூமியைக் கீழதுமேலதாக்கும்.


  • Job 12:14

    இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.