Tamil

  • Job 36:5

    இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.


  • Job 36:4

    மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.


  • Job 36:3

    நான் தூரத்திலிருந்து ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.


  • Job 36:2

    நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.


  • Job 36:1

    பின்னும் எலிகூ:


  • Job 35:16

    ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.


  • Job 35:15

    இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.


  • Job 35:14

    அவருடைய தரிசனம் உமக்குக் கிடக்கிறதில்லை என்று நீ சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.


  • Job 35:13

    தேவன் வீண்வார்த்தைக்குச் செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.


  • Job 35:12

    அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரே மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.