Tamil

  • Job 38:28

    மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?


  • Job 38:27

    வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும் இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?


  • Job 38:26

    பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,


  • Job 38:25

    பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,


  • Job 38:24

    வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?


  • Job 38:23

    ஆபத்து வருங்காலத்திலும் கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.


  • Job 38:22

    உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?


  • Job 38:21

    நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின்தொகை அவ்வளவு பெரிதோ?


  • Job 38:20

    அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?


  • Job 38:19

    வெளிச்சம் வாசமாயிருக்குமிடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?