Tamil

  • Job 38:38

    தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?


  • Job 38:37

    ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?


  • Job 38:36

    அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?


  • Job 38:35

    நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: அங்கேயிருக்கிறோம் என்று உனக்கு சொல்லும்படி செய்வாயோ?


  • Job 38:34

    ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?


  • Job 38:33

    வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?


  • Job 38:32

    இராசிகளை, அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச்சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?


  • Job 38:31

    அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?


  • Job 38:30

    ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.


  • Job 38:29

    உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப்பெற்றவர் யார்?