Tamil

  • 1 Chronicles 27:22

    தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.


  • 1 Chronicles 27:21

    கிலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.


  • 1 Chronicles 27:20

    எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.


  • 1 Chronicles 27:19

    செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.


  • 1 Chronicles 27:18

    யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.


  • 1 Chronicles 27:17

    லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.


  • 1 Chronicles 27:16

    இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்; ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.


  • 1 Chronicles 27:15

    பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.


  • 1 Chronicles 27:14

    பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.


  • 1 Chronicles 27:13

    பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.