Tamil

  • Job 13:28

    இப்படிப்பட்டவன் அழுகிப்போகி, வஸ்துபோலவும் பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.


  • Job 13:27

    என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.


  • Job 13:26

    மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.


  • Job 13:25

    காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?


  • Job 13:24

    நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.


  • Job 13:23

    என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.


  • Job 13:22

    நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.


  • Job 13:21

    உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.


  • Job 13:20

    இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.


  • Job 13:19

    என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.