Tamil
-
Job 16:13
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
-
Job 16:12
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
-
Job 16:11
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
-
Job 16:10
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
-
Job 16:9
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
-
Job 16:8
நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.
-
-
-
Job 16:5
ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன் சொல்லுவேன். என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
-
Job 16:4
உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிராகத் தலையைத் துலுக்கவுங்கூடும்.