Tamil

  • Psalm 106:40

    அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.


  • Psalm 106:39

    அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.


  • Psalm 106:38

    அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.


  • Psalm 106:37

    அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.


  • Psalm 106:36

    அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.


  • Psalm 106:35

    ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;


  • Psalm 106:34

    கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.


  • Psalm 106:33

    அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளில் பதறிப்பேசினான்.


  • Psalm 106:32

    மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது.


  • Psalm 106:31

    அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.