Tamil

  • Psalm 107:42

    உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.


  • Psalm 107:41

    எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.


  • Psalm 107:40

    அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,


  • Psalm 107:39

    பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.


  • Psalm 107:38

    அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.


  • Psalm 107:37

    வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.


  • Psalm 107:36

    பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,


  • Psalm 107:35

    அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,


  • Psalm 107:34

    குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.


  • Psalm 107:33

    அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும் நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,