Tamil

  • Psalm 116:13

    இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.


  • Psalm 116:12

    கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.


  • Psalm 116:11

    எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.


  • Psalm 116:10

    விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.


  • Psalm 116:9

    நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.


  • Psalm 116:8

    என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.


  • Psalm 116:7

    என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.


  • Psalm 116:6

    கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்து போனேன், அவர் என்னை இரட்சித்தார்.


  • Psalm 116:5

    கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மன உருக்கமானவர்.


  • Psalm 116:4

    அப்பொது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியுமென்று கெஞ்சினேன்.