Tamil

  • Psalm 125:1

    கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.


  • Psalm 124:8

    நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.


  • Psalm 124:7

    வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.


  • Psalm 124:6

    நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


  • Psalm 124:5

    கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.


  • Psalm 124:4

    அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,


  • Psalm 124:3

    அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில் நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.


  • Psalm 124:2

    கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,


  • Psalm 124:1

    மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,


  • Psalm 123:4

    சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும் அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.