Tamil

  • Psalm 148:10

    காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.


  • Psalm 148:9

    மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,


  • Psalm 148:8

    அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,


  • Psalm 148:7

    பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகா மச்சங்களே, சகல ஆழங்களே,


  • Psalm 148:6

    அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.


  • Psalm 148:5

    அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.


  • Psalm 148:4

    வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.


  • Psalm 148:3

    சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.


  • Psalm 148:2

    அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.


  • Psalm 148:1

    அல்லேலுூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.