வேதாகம ஆய்வு · Blessing
ஆசீர்வாதம் —, விரும்பு, கேள், பேசு, சுதந்தரி
நான்கு அசைவுகள்: ஆசீர்வாதத்தை விரும்புவதும், கேட்பதும், பேசுவதும், சுதந்தரித்துக் கொள்வதும். ஒவ்வொரு பகுதியிலும் வார்த்தையை வாசியுங்கள்.
ஆசீர்வாதத்தை விரும்பு
Desire the blessingசங்கீதம் 109:17 “சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வந்தது; ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனை விட்டு விலகிப்போயிற்று.”
சங்கீதம் 34:19 “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.”
நீதிமொழிகள் 12:21 “நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.”
ஆசீர்வாதத்தைக் கேள்
Ask for the blessing · யாபேஸ்1 நாளாகமம் 4:9 “யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான்; அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி, அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.”
1 நாளாகமம் 4:10 “யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.”
ஆசீர்வாதத்தைப் பேசு
Speak the blessing1 பேதுரு 2:9 “நீங்களோ, உங்களை இருளினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”
ஏசாயா 43:21 “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.”
2 கொரிந்தியர் 3:6 “புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.”
ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்
Take hold of the blessing1 பேதுரு 3:9 “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.”
எண்ணாகமம் 13:32 — 10 உளவாளிகளின் துர்ச்செய்தி
“அவர்கள் தாங்கள் உளவுபார்த்த தேசத்தைக் குறித்து இஸ்ரவேல் புத்திரரிடத்தில் துர்ச்செய்தி சொல்லி: நாங்கள் உளவுபார்க்கும்படி கடந்துபோன அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.”
எண்ணாகமம் 13:30 — காலேபின் நல்ல அறிக்கை
“அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.”
எண்ணாகமம் 14:8 — யோசுவா & காலேப்
“கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்த தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை நமக்குக் கொடுப்பார்.”
எண்ணாகமம் 14:24 “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”
ஆசீர்வாதத்தை விரும்புங்கள் — கேளுங்கள் — பேசுங்கள் — சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் வேதாகமம் · NKJV Tamil