Archives: Tamil
-
Zechariah 6:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
-
Zechariah 6:3
மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன.
-
Zechariah 6:2
முதலாம் இரதத்தில் சிவப்புக்குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,
-
Zechariah 6:1
நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன.
-
Zechariah 5:11
அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
-
Zechariah 5:10
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
-
Zechariah 5:9
அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.
-
Zechariah 5:8
அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
-
Zechariah 5:7
இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.
-
Zechariah 5:6
அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.