Archives: Tamil

  • Lamentations 3:47

    திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.

  • Lamentations 3:46

    எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

  • Lamentations 3:45

    ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

  • Lamentations 3:44

    ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

  • Lamentations 3:43

    தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.

  • Lamentations 3:42

    நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

  • Lamentations 3:41

    நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

  • Lamentations 3:40

    நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

  • Lamentations 3:39

    உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

  • Lamentations 3:38

    உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?