Matthew 5:20 in Tamil 20 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Other Translations King James Version (KJV) For I say unto you, That except your righteousness shall exceed the righteousness of the scribes and Pharisees, ye shall in no case enter into the kingdom of heaven.
American Standard Version (ASV) For I say unto you, that except your righteousness shall exceed `the righteousness' of the scribes and Pharisees, ye shall in no wise enter into the kingdom of heaven.
Bible in Basic English (BBE) For I say to you, If your righteousness is not greater than the righteousness of the scribes and Pharisees, you will never go into the kingdom of heaven.
Darby English Bible (DBY) For I say unto you, that unless your righteousness surpass [that] of the scribes and Pharisees, ye shall in no wise enter into the kingdom of the heavens.
World English Bible (WEB) For I tell you that unless your righteousness exceeds that of the scribes and Pharisees, there is no way you will enter into the Kingdom of Heaven.
Young's Literal Translation (YLT) `For I say to you, that if your righteousness may not abound above that of the scribes and Pharisees, ye may not enter to the reign of the heavens.
Cross Reference Matthew 3:10 in Tamil 10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
Matthew 7:21 in Tamil 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
Matthew 18:5 in Tamil 5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
Matthew 23:2 in Tamil 2 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
Matthew 23:23 in Tamil 23 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.
Mark 10:15 in Tamil 15 யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
Mark 10:25 in Tamil 25 செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
Luke 11:39 in Tamil 39 கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
Luke 11:44 in Tamil 44 வேதபண்டிதர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற சவக்குழிகளைப்போல இருக்கிறீர்கள், அதின்மேல் நடக்கிற மனிதர்களுக்கு அவைகள் தெரியாதிருக்கிறது.
Luke 12:1 in Tamil 1 அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
Luke 16:14 in Tamil 14 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.
Luke 18:10 in Tamil 10 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
Luke 18:17 in Tamil 17 எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Luke 18:24 in Tamil 24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
Luke 20:46 in Tamil 46 நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வணக்கங்களைப் பெறவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
John 3:3 in Tamil 3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Romans 9:30 in Tamil 30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே.
Romans 10:2 in Tamil 2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை.
2 Corinthians 5:17 in Tamil 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.
Philippians 3:9 in Tamil 9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும்,
Hebrews 12:14 in Tamil 14 எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிக்கமுடியாது.
Revelation 21:27 in Tamil 27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.